• Breaking News

    அல்லு அர்ஜுனோடு ரொமான்ஸ் செய்ய தயார்..... பிரபல நடிகையின் ஆசை



     “மேயாத மான்” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் அடுத்தடுத்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தார். கடைசியாக இந்தியன் 2, ரத்தினம், டிமாண்ட் காலனி 2,  பிளாக் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் அல்லு அர்ஜுன் குறித்து பேசிய தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    அதாவது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பல ஹீரோயின்கள் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி ஒரு வாய்ப்புக்காக பலர் காத்திருக்கும் வரிசையில் தற்போது பிரியா பவானிசங்கர் இணைந்துள்ளார். அல்லு அர்ஜுன் மிகவும் பிரபலமானவர் என்று கூறிய பிரியா பவானி சங்கர் அவரோடு திரையில் நடிக்க விரும்புவதாகும் ரொமான்ஸ் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    No comments