• Breaking News

    திருட்டு தொழிலில் கொடிகட்டிப் பறந்த இரு பெண்கள் கைது


     கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆய்ஷ்ம்மாள் மற்றும் வசந்தா ஒரு வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 75 வயது ஆகும் நிலையில் இந்த வயதான மூதாட்டிகளிடம் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். அதன்படி இருவரிடமும் 11 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அந்தப் பெண்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நந்தினி (28) மற்றும் காளீஸ்வரி (28). இவர்கள் இருவரும் அண்ணன் தம்பியை திருமணம் செய்து கொண்ட நிலையில் நந்தினி சிறு வயது முதலே தன் தாயுடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர். 12 வயதிலிருந்து நந்தினி திருட்டை தொடங்கிய நிலையில் திருமணத்திற்கு பிறகு காளீஸ்வரியையும் திருட்டு சம்பவத்திற்கு உட்படுத்தி அவரையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.இவர்கள் நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடும்பத்துடன் சேர்ந்து திருடிய நிலையில் கோவில் திருவிழாக்கள் மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் கைவரிசை காட்டுவார்கள்.

     பின்னர் அந்த நகைகளை அந்தந்த இடத்திலேயே விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தூத்துக்குடியில் ஒரு ஆடம்பர பங்களாவையும் கட்டியுள்ளனர். இவர்கள் தங்கள் குழந்தைகளை பெரிய பள்ளிகளில் படிக்க வைக்கும் நிலையில் தாங்கள் விரும்பிய ஊர்களுக்கும் ஜாலியாக சுற்றி வந்துள்ளனர். இவர்கள் திருடும் பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கி திருடுகிறார்கள். அப்படித்தான் கோவையில் கோவில் திருவிழா நடப்பதை கேள்விப்பட்டு திருட வந்து மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து 11 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இருவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

    No comments