• Breaking News

    நன்மங்கலம் ஏரி பாதுகாப்பு குழு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்









    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பாக தாம்பரம் மாநகராட்சி உள்ள நன்மங்கலம் ஏரியை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என்று நன்மங்கலம் ஏரி பாதுகாப்பு குழுவினர் ஜலரக்ஷனா,  சிட்லப்பாக்கம் ரைசிங் குழு, எக்ஸ்னோரா, இஃபா, கல்லூரி மாணவர்கள் எஸ்.ஐ.வி.டி, எம் சி சி ஜெயின், பிரின்ஸ் காலேஜ் சார்பில் செம்பாக்கம் சீயோன்  பள்ளி வளாகத்தில் இருந்து காலை 7 மணிக்கு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், நல சங்கங்கள், நன்மங்கலம் ஏரி பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக நன்மங்கலம் ஏரி மற்றும் அதனை  சுற்றியுள்ள  குடியிருப்பு பகுதி வழியாக ஏரிகளை பாதுகாப்போம் ஏரிகளில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்துவோம், போன்ற வாசகம் அடங்கிய அட்டைகள் ஏந்தி கொண்டு  கோஷங்கள்  எழுப்பியவாறு பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    இதில் மூத்த சமூக ஆர்வலர் சந்தானம் அவர்கள் கலந்துகொண்டு ஏரிகளை எப்படி பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏரியில் சுற்றியுள்ள அனைத்து தன்னார்வலர்கள், அசோசியேஷன் நகர் மற்றும் குடியிருப்பு வாசிகள் என்ஜிஓ மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    No comments