• Breaking News

    என்னுடைய போட்டோவை போடுவதற்கு பயப்படுகிறார்கள்.... கொளுத்திப்போட்ட கோகுல இந்திரா..... அதிமுகவில் சலசலப்பு

     


    முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அதிமுகவில் அன்பு மரியாதை இல்லை போஸ்டரில் என்னுடைய பெயரும் இடம் பெறுவது கிடையாது என்று பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

    சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், “நேர்மை என்பது எல்லா இடத்திலும் இருக்க வேண்டும். என்னை பார்த்த உடனே நிறைய பேர் கும்பிடுவதற்கு பயப்படுகிறார்கள். என்னுடைய போட்டோவை போடுவதற்கு பயப்படுகிறார்கள். இதையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும். தென் சென்னை பொறுப்பாளராக என்னை அறிவித்த பிறகு நிறைய பேர் கூப்பிட்டார்கள். பொதுச் செயலாளர் இட்ட கட்டளைக்கு மாறாக மத்திய தொகுதியிலோ. அண்ணாநகர் தொகுதி தேர்தல் பணிகளிலும் நான் தலையிட்டதே கிடையாது.

    நான் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதும் கிடையாது. குரூப்பிசம் செய்வதும் கிடையாது. யாரிடம் எதுவும் சொல்வதும் கிடையாது. மாவட்ட செயலாளரும் நானும் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசினோம். நானே தான் ஒரு விஷயமாக அவரிடம் போனில் பேசினேன். அப்போ கூட பேசி இருக்கலாம். அந்த டைமுக்கு வந்து விடுங்கள் என்று நாங்கள் கேட்பது ஒரு அடிப்படை மரியாதை.

    எங்களிடம் பேசினால், எங்கள் பெயர் நோட்டீஸில் போட்டால் பதவி பறிபோய்விடும் என்ற நிலைமைகள் மாற வேண்டும். எப்போதும் வீட்டில் அன்பையும், மரியாதை இருந்தால் எதிர்பார்ப்பார்கள். அப்படி எதிர் பார்க்கிற நிலையில் என் பெயரை போடக்கூடாது போஸ்டரில் அவங்க பெயரை வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறீர்கள். தம்பி ஹேமந்த். தம்பி குப்பனுக்கு என்ன நிர்பந்தம்? நீங்கதானே வட்ட செயலாளர்கள் என்று பேசி உள்ளார். இதனால் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.

    No comments