• Breaking News

    ஒரு எம்பி மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை..... சேகர்பாபு வீரவசனம் பேசுகின்றார்..... அண்ணாமலை ஆவேசம்


     தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், திருப்பரங்குன்றம் சரித்திரம் சேகர்பாபுவுக்கு தெரியுமா? 2026 ஆம் ஆண்டு இதே பிரச்சினை வந்தபோது அங்கிருந்த சப் ஜட்ஜ் தீர்ப்பு தருகின்றார். திருப்பரங்குன்றம் கோவில் எந்த சந்தேகமும் இல்லாமல் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது. அரசு நிலங்கள் அரசுக்கு சொந்தமானது என 1926 ஆம் ஆண்டு தீர்ப்பு தெளிவாக உள்ளது. அது முழுக்க முழுக்க கோவிலுக்கு சொந்தமானது.

    ஆங்கிலேயர்கள் இந்து மக்களுக்காக தற்காத்த ஒரு கோவிலை திராவிட கும்பல் திமுக அதை கெடுக்க தயாராக இருக்கின்றது. சேகர்பாபு 1931 ஆம் ஆண்டு தரப்பட்ட தீர்ப்பை படிக்க வேண்டும். புதிதாக தற்போது மற்றொரு மதத்தை சார்ந்தவர்கள் பிரச்சனையை தொடங்குகிறார்கள். ஆடு எடுத்துச் சென்று சாப்பிடுகிறார்கள். ஒரு எம்பி மீது நடவடிக்கை எடுக்க உங்களுக்கு துப்பு இல்லை, சேகர்பாபு வீரவசனம் பேசுகின்றார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    No comments