தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மாற்றம்
கடந்த சில தேர்தல்கள் காங்கிரசுக்கு பெருத்த அடியாகவே இருந்து வருகிறது குறிப்பாக, நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் 3வது முறையாக பூஜ்யம் சீட்டுகளே கிடைத்துள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சியினர் துவண்டு போயுள்ளனர். மேலும், இண்டி கூட்டணியில் காங்கிரஸூக்கான மவுசும் குறைந்து கொண்டே போயுள்ளது.எனவே, கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் பொறுப்பார்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சத்துஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹேல் பஞ்சாப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பொறுப்பாளராக சையத் நசீர் ஹூசேன் நியமனம் செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் பிஹாருக்கு கிருஷ்ணா அல்லவருவும், ஹரியானாவுக்கு ஹரிபிரசாத்தும், சண்டிகர் மற்றும் ஹிமாச்சலுக்கு ரஜனி பட்டீலும், மத்திய பிரதேசத்திற்கு ஹரீஷ் சவுத்ரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளராக இருந்த அஜோய் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, கிரிஷ் ஜோடகன்கரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரிக்கும் பொறுப்பாளராக செயல்பட உள்ளார். இதேபோல, பல மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments