திருமருகல் வட்டாரத்தில் சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு புத்தாக்க பயிற்சி
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடப்பாண்டு 2024- 2025 ஆண்டுக்கான சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் 15.02.24 முதல் 17.02.24 வரை இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி பயிற்சி அளித்தார்.
இதில் வட்டார இயக்க மேலாளர் அறிவு நிதி தலைமையில் கார்த்திகா முன்னிலையில் பயிற்சி நடைபெற்றது இதில் மகளிர் திட்டத்தின் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் பொறுப்புகள் கடமைகள் நிர்வாக அமைப்புமுறை, திட்டத்தின் கோட்பாடுகள், குழுவின் வகைகள், பஞ்சசூத்திரா, விடுப்பட்ட இலக்கு மக்கள் குழுவில் இணைத்தல், பயிற்சி அளித்தல், தர ஆய்வு, தரமதிப்பீடு, வங்கி இணைப்பு, காப்பீடு செய்தல், சுயஉதவிக் குழுக்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைத்தல்,இணையதளத்தில் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கு அரசு திட்டங்கள் பெற்று தருதல். இளைஞர்களுக்கு பயிற்சி கூடிய வேலை வாய்ப்பு அளித்தல், பதிவேடுகள் பராமரித்தல்,உரிமைச் சார்ந்த திட்டங்கள் வாழ்வாதார திட்டங்கள், சமூக மேம்பாடு, போன்றவை பயிற்சி அளிக்கப்பட்டது. 35 ஊராட்சியில் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் கலந்து கொண்டார்.
நாகை மாவட்ட நிருபர்
ஜி.சக்கரவர்த்தி
No comments