பிரபல நடிகையிடம் செல்பி எடுக்கும் போது கிஸ் அடிக்க முயன்ற ரசிகர்
பிரபல நடிகை பூனம் பாண்டே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது, பின்னால் இருந்து வந்த ஒரு ரசிகர், செல்பி எடுத்துக்கொள்ள முயன்றார். ஆனால், அவருக்கு அனுமதி கொடுத்தவுடன், அவர் முன்னேறி பூனம் பாண்டேவுக்கு முத்தமிட முயற்சித்ததால், பூனம் அதிர்ச்சியடைந்து அவரை தள்ளியுள்ளார். இச்சம்பவம் அங்கு இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் பூனம் பாண்டே இதற்கு முன்பும் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் என்பதால், இந்த சம்பவம் உண்மையா, பொய்யா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு, செர்விக்கல் புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, பூனம் பாண்டே தனது மரணத்தை போலியாக அறிவித்திருந்தார்.
இந்த தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அவர் வீடியோ ஒன்றில் உயிருடன் இருப்பதாக அறிவித்ததால் கடும் விமர்சனங்களுக்குள்ளானார்.இப்படி பல சர்ச்சைகளில் சிக்கிய பூனம், இந்த விவகாரத்தினால் மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவத்தில் இடம்பிடித்துள்ளார்.
No comments