• Breaking News

    காரைக்குடி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..... விடுதி வாட்ச்மேன் கைது

     



    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தோறும் நடந்து வருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. சமீபத்தில் அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், காரைக்குடியில் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி 2ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் விடுதி வாட்ச்மேன் பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. பின்னர், வாட்ச்மேன் அழகப்பனை போலீசார் கைது செய்தனர்.

    No comments