உலகின் ஊழல் நிறைந்த நாடுகள்.... இந்தியாவுக்கு எத்தனாவது இடம்..?
உலகம் முழுவதும் ஆய்வு செய்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் ஊழல் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டிற்கான ஊழல் நாடுகளின் பட்டியலை தற்போது அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதாவது அரசுத் துறையில் நிலவும் ஊழல் தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் கருத்து கேட்டு இந்த பட்டியலை அந்த நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த பட்டியலில் 180 நாடுகள் தரவரிசைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்கள் நாடுகளுக்கு வழங்கப்படும் நிலையில் இதில் பூஜ்ஜியம் என்பது அதிக ஊழல் நிறைந்த நாடாகவும் 100 என்பது ஊழல் இல்லாத நாடு என்பதையும் குறிக்கிறது. கடந்த வருடம் ஊழல் பட்டியலில் மொத்தம் 180 நாடுகளில் இடம் பெற்றுள்ளது. இதில் இந்தியா 96 வது இடத்தில் இருக்கிறது. கடந்த வருடத்திற்கான இந்தியாவின் மதிப்பு 39 ஆக இருக்கும் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 39 மதிப்பெண் பெற்றிருந்தது.
தற்போது ஒரு சதவீதம் குறைந்து ஊழல் அதிகரித்துள்ளது. இந்த மதிப்பெண் கடந்த 2022 ஆம் ஆண்டு 40 ஆக இருந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் தரவரிசை 93 ஆக இருந்தது. இந்த பட்டியலில் நம்முடைய பக்கத்து நாடுகளான பாகிஸ்தான் 135 வது இடத்திலும் இலங்கை 121 வது இடத்திலும் இருக்கிறது.
அதே சமயத்தில் வங்கதேசம் 141 வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. இந்த பட்டியலில் சீனா 76 வது இடத்தில் இருக்கிறது.மேலும் ஊழல் குறைந்துள்ள நாடாக டென்மார்க் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் இதற்கு அடுத்த இடங்களில் பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இருக்கிறது.
No comments