தென்காசி: வன்கொடுமை தடுப்பு சட்ட பாதிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
தென்காசி அருகே கடபோகத்தியில் வன்கொடுமை தடுப்பு சட்ட பாதிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
தென்காசி அருகேயுள்ள கடபோகத்தி கிராமத்தில் தென்தமிழர் கட்சி சார்பில், அடிப்படை சட்ட விழிப்புணர்வு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கீழப்பாவூர் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் தினேஷ்பாண்டியன் தலைமை வகித்தார்.
தென்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்வழக்கறிஞர் பாலமுரளி சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார்.தென்தமிழர் கட்சியின் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் பாண்டி, பசும்பொன் தேசிய கழக தென்காசி மாவட்ட செயலாளர் துரைத்தேவன், சபாபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் 40 ற்கும் மேற்பட்ட விதிகள் உள்ளன. இந்த விதிகளை குறைப்பதற்கு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது தவறு இல்லை என்பதனை உறுதி செய்து நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டால் புகார்தாரர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தொகையை திரும்ப பெற சட்டம் இயற்றப்பட வேண்டும். போலி புகாரளிக்கும் நபர் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்;மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments