ஆலங்குளத்தில் பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு உணவு பொருட்கள் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்
ஆலங்குளத்தில் பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு உணவு பொருட்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
தைப்பூச திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரகணக்கான முருக பக்தர்கள் ஆலங்குளம் வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். இவர்களுக்கு ஆலங்குளம் பத்ரா ஆன்மீக நண்பர்கள் குழு சார்பில் ஆண்டு தோறும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 5ம் ஆண்டாக இந்தாண்டும் நேற்று இரவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு, முருக பக்தர்களுக்கு குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில், சுண்டல் ,சுக்கு காபி மற்றும் உணவு பொருட்களை வழங்கினார். மேலும் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் விபத்துக்கு உள்ளாகாத வகையில் அவர்கள் அணிந்திருக்கும் சட்டை மற்றும் துணிப்பைகளில் ரிஃப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கசெல்வம், திமுக நிர்வாகிகள் அரவிந்த் ராஜ் திலக், நாகராஜ் எம்.சரவணார், ஸ்டீபன் சத்தியராஜ், அன்பழகன், சோனா மகேஷ் மற்றும்பத்ரா ஆன்மீக நண்பர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.
No comments