காதலில் விழுந்த மகளுக்கு முட்டை பொரியலில் விஷம் கலந்த தாய்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முனுசாமி மல்லிகா (47) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குறுஞ்சி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 20 வயது ஆகும் நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சாய்குமார் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில் இந்த காதல் விவகாரம் மல்லிகாவுக்கு தெரிய வரவே தன் மகளை கடுமையாக கண்டித்து காதலை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து அவருடைய மகள் தாய் சொல்வதை கேட்காமல் செல்போனில் காதலனுடன் பேசினார்.இதனால் கோபத்தில் மல்லிகா தன் மகளை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி முட்டை பொரியலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
அதாவது அதில் எலி பேஸ்ட்டை கலந்த நிலையில் அதை சாப்பிட்ட மகள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். தன் மகளிடம் சிறிது நேரம் கழித்து விஷம் கலந்ததை மல்லிகா கூறிய நிலையில் உடனடியாக அந்த பெண்ணின் அண்ணன் மற்றும் தந்தை இருவரும் குறுஞ்சியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படும் நிலையில் காவல் நிலையத்தில் குறிஞ்சி புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை கைது செய்துள்ளனர்.
No comments