தாம்பரம் மேற்கு பகுதி திமுக கழக சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி தாம்பரம் மேற்கு பகுதி கழக அவசர செயற்குழு கூட்டம் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மாநகர கழக செயலாளர் எஸ்.ஆர்.ராஜா அறிவுறத்தலின் படி 18.02.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி அளவில் கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவில் அமைந்துள்ள சாந்தி திருமண மண்டபத்தில் தாம்பரம் மேற்கு பகுதி கழக அவை தலைவர் வி.முனுசாமி தலைமையிலும் பகுதி கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.
இதில் 5வது மண்டல குழு தலைவர் பகுதி கழக செயலாளர் எஸ்.இந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதியில் உள்ள வட்ட கழக நிர்வாகிகள்அவர் அவர்களின் வட்டங்களில் காலையிலேயே ஒலி ஒளி அமைத்து கழக பாடல்களை இசைத்தும் கழக கொடியை ஏற்றி விட்டு இனிப்பும் மற்றும் காலை சிற்றுண்டி மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் அதன் பின் தவறாமல் அனைத்து வட்ட நிர்வாகிகளும் தாம்பரம் மேற்குபகுதியில் உள்ள 62வட்டத்தில் காலை 8.00 மணிக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மாநகர கழக செயலாளர் எஸ்.ஆர்.ராஜா கழக கொடியை ஏற்றி காலை உணவையும் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
எனவே பகுதி கழக நிர்வாகிகளும் வட்ட கழக நிர்வாகிகளும் இளைஞரணி,மாணவரணி,மகளிரணி மற்றும் கழகத்தின் அனைத்து அணிகளின் அமைப்பாளர்களும் துணை அமைப்பாளர்களும் அனைவரும் தவறாது வருகை தந்து நிகழ்ச்சிகளை சிறப்பித்திட வேண்டும் என கேட்டு கொண்டார்.
No comments