பெரிய தும்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பெரியதும்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சியம்பாள் சமேத சொக்கநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜையை விடிய விடிய நடைபெற்றது. சிவராத்திரியை முன்னிட்டு திசைகளை வெளிச்சப்படுத்துவோம் என்ற தலைப்பில் கவியரங்கம் புலவர் தி. வேதரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாவலர்கள் க. இரவிச்சந்திரன், சுதாஅருணகிரி, ரெ. சுரேஷ்,கு.மகிழன்,பா. பாலமுத்துமணி உள்ளிட்டோர் கவி பாடினர் .
அதனைத் தொடர்ந்து பக்தி மார்க்கத்தில் மிஞ்சி நிற்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் முனைவர் தி.வேதரெத்தினம் தொடக்க உரை நிகழ்த்தினார். நடுவராக மஞ்சுளாவும் ஆண்களா என்ற தலைப்பில் பயன்மர செங்குட்டுவன், குவளை க.இரவிச்சந்திரன்,ரெ.சுரேஷ் பெண்களை என்ற தலைப்பில் கவிஞர் சே.ரூபா, கவிஞர் சுதாஅருணகிரி,பா.பாலமுத்துமணி உள்ளிட்டோர் பேசினர்.
அதனைத் தொடர்ந்து பெரியத்தும்பூர் இளைஞர்கள் நடத்தும் இளையநிலா வின்ஸ்டார் நடன குழு இணைந்து வழங்கும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments