ஒழலக்கோயில் புதிய நியாய விலை கடையை நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் திறந்து வைத்து பொருட்கள் வழங்கினார்
ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம் , ஒழலக்கோயில் ஊராட்சி, ஒழலக்கோயில் நியாய விலைக் கடை திறப்பு விழாமலையப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் என்.ஆர்.கனகராஜன் தலைமையில்,நியாய விலை கடை விற்பனையாளர் ராஜம்மாள் பிரின்சி முன்னிலையில்,நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும் , நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் பா செந்தில் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நியாய விலை கடையினை திறப்பு விழா செய்தும், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது தொ.மு .ச கே.கே.பழனிச்சாமி , மலையப்பாளையம் குப்புசாமி , சின்னசெட்டியாபாளையம் சி.டி.மகேஷ்குமார் , மலையப்பாளையம் நடராஜ் , நம்பியூர் பேரூராட்சி 8-வது வார்டு செயலாளர் என்.எஸ்.ஆனந்தகுமார் , துரைசாமி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments