• Breaking News

    அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயின்று வரும் மாணவிக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் நிதி உதவி


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,பூண்டி கிழக்கு ஒன்றியம்,பேரிட்டிவாக்கம் ஊராட்சியை சேர்ந்தமுனிரத்தினம் திருமதி.சுஜாதா ஆகியோரின் மூத்த மகள் செல்வி.மு.லாவண்யா அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று ஓசூர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றுவருகிறார்.


    இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கும் மேற்படி மருத்துவ மாணவியின் கல்லூரி செலவிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், டி.ஜெ..கோவிந்தராஜன் வருடாவருடம் 25,000 அளித்து வருகிறார்.அதனடிப்படையில் இன்று3.வது வருடம் மேற்படி மருத்துவ மாணவியிடம் ரூ.25,000 திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்,டி.ஜெ.கோவிந்தராஜன்.அவர்கள்நிதிஅளித்தார்.உடன் மாவட்ட பொருளாளர் ரமேஷ் மற்றும் நரேஷ்.கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    No comments