ஆலங்குளத்தில் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..... முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்
ஆலங்குளத்தில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.
ஆலங்குளத்தில் தேசிய தாய்மொழி தினத்தையொட்டி ஆலங்குளம் பசுமை இயக்கம், தேசிய பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதற்காக பரிசளிப்பு விழாவில் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், டாக்டர் புஷ்பலதா, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்கசெல்வம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், திமுக நிர்வாகிகள் மேகநாதன், பொன்னரசு, அசோக், ஏ.பி.என்.குணா, சேர்மலிங்கம், காசிபாண்டியன், பால் அருணாசலம், சுந்தர், ஸ்டீபன் சத்தியராஜ், அன்பழகன், ஹரி, சோனா மகேஷ், காங்கிரஸ் பிரமுகர் ஏசுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments