அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும் - தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக மாபெரும் ஏகத்துவ எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமையில் மாநில பொதுச் செயளாலர் முஜிபுர் ரஹ்மான், மாநிலப் பொருளாளர் காஞ்சி இப்ராஹிம், மாநிலச் செயலாளர்கள் அன்சாரி, ரபீக் முகமது, மாவட்டச் செயலாளர் முகமது மீரான், பொருளாளர் ரபீக் ராஜா, துணைச் செயலாளர்கள் A.ஷேக் அப்துல்லாஹ், M.ஷேக் அப்துல்லாஹ், புதுகை மீரான், அப்துல் ரஹ்மான் ரஹுஃப், மருத்துவ அணிச் செயலாளர் சபியுல்லா, மாணவரணிச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், வர்த்தகரணிச் செயலாளர் உஸ்மான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இதில் தணிக்கை குழு தலைவர் M.S.சுலைமான், மாநிலச் செயலாளர் முஹம்மது ஃபைசல், பேச்சாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மேலும் தொகுப்புரை மற்றும் தீர்மானங்களை மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் வாசித்தார். இந்த மாநாட்டில் சமூக விழிப்புணர்வு பட்டிமன்றம் மற்றும் மதரஸா மாணவர்களின் கண்காட்சிகள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்டச் செயலாளர் முகமது மீரான் நன்றியுரை கூறினார்கள். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியா கூட்டணியில் ஒற்றுமையின்மையால் டெல்லி தேர்தலில் தோல்வியை தழுவியது. வருங்காலங்களிலாவது சுயநலன்களை விட்டு நாட்டின் நலனுக்கு எதிர்கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் தமிழகத்தின் அமைதியை குலைக்கும் வகையில் செயல்படக்கூடிய பாஜக உள்ளிட்ட சங்பரிவாரத்தினர் கைது செய்யப்பட
வேண்டும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த மதுரை மாவட்டத்தின் அரசு ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், ஏழை மக்களுக்கு எதிரான ஒன்றிய பட்ஜெட்டை வன்மையாககண்டிக்கின்றோம், வக்ப் வாரிய மசோதாவை ஜனநாயக ரீதியாக முறியடிப்போம், வக்ப் வாரிய திருத்த மசோதாவில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும், சிறுபான்மையினருக்கான கல்வி உதவியை மீண்டும் வழங்க வேண்டும் என கேரள கம்யூனிஸ்ட் அரசை இந்த மாநாட்டின் வாயிலாககேட்டுக்கொள்கிறோம்.
இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வேண்டும்,அறந்தாங்கி தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு நோயாளிகளை அனுப்பி விடுகிறார்கள். மேலும் எக்ஸ்ரே, எக்கோ ஸ்கேன் எடுக்க சில நேரங்களில் ஆள் இல்லை என்று கூறுகிறார்கள்.மேலும் நோயாளிகளுக்கு CT ஸ்கேன் எடுத்து மூன்று நாளைக்குப் பிறகுதான் ரிப்போர்ட் கொடுப்போம் என்று கூறுகிறார்கள். இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும், அறந்தாங்கி மற்றும் கடலோர பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்கிறார்கள். அப்படி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சாலைகளில் சுற்றி தெரியும் ஆடு, மாடு மற்றும் தெருநாய்களால் பல்வேறு விபத்துக்களும், பொதுமக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்ககளும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments