• Breaking News

    புதிய பாம்பன் ரயில் பாலம்..... ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரத்துக்கு ரயில்கள்

     


    ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலம், 545 கோடி ரூபாயில் கட்டப்பட்டு அனைத்து சோதனைகளும் முடிக்கப் பட்டு உள்ளன. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சமீபத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

    அடுத்த மாதம் முதல் வாரத்தில், பிரதமர் மோடி இந்த பாலத்தை திறப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

    சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம், விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பாலத்தில், 75 கி.மீ., வேகத்திலும், நடுவில், 72 மீட்டர் நீளமுள்ள துாக்கு பாலத்தில், 50 கி.மீ., வேகத்திலும், ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து, ராமேஸ்வரத்துக்கு இயக்கப்பட்ட 22 விரைவு ரயில்கள், 2019 மார்ச் முதல் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. புதிய பாலம் பயன்பாட்டிற்கு வந்ததும், படிப்படியாக அனைத்து ரயில்களும் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    No comments