திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கும்மிடிப்பூண்டி தொகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பல்வேறு இடங்கள் ஆய்வு மேற்கொண்டார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப்.தொடர்ந்து கவரப்பேட்டையில் கால்நடை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தவர், கால்நடை மருத்துமனை கட்டிடம் மோசமாக உள்ள நிலையில் அதனை சரி செய்ய உத்தரவிட்டார்.
பின் மேல்முதலம்பேடு கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் சொட்டு நீர் பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி தோட்டத்தை ஆய்வு செய்தவர், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜெபகுமாரி ஆனி, உதவி இயக்குனர் பிரதீப் குமாரிடம் அரசின் திட்டங்கள் குறித்து பேசி ஆலோசனைகளை வழங்கியவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்.
பின் ஆட்சியர் மு.பிரதாப் கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2.50கோடி மதிப்பீட்டில் 8வகுப்பறை 2ஆய்வக கட்டிட பணியை ஆய்வு செய்தவர் ,ஆய்வு செய்ததோடு, மாணவர்களோடு கலந்துரையாடினார். மேலும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வையும் பார்வையிட்டவர், பள்ளியில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகளை நடத்துவதை கண்டித்தவர், விளையாட்டு நேரத்தில் மாணவர்கள் விளையாட வேண்டும், வகுப்புகளில் இருக்க கூடாது என்று உத்தரவிட்டார் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் சாலையோர வியாபாரிகளுக்காக கட்டப்படும் வணிக தளத்தையும் ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்களை பெற்றவர், கும்மிடிப்பூண்டியில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தவர் கல்லூரிமாணவர்களிடம் உரையாடினார்.
பின் பெத்திக்குப்பம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை ஆய்வு செய்தவர்,
தொடர்ந்து வியாழக்கிழமை கும்மிடிப்பூண்டி கேஎல்கே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தவர், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமாரிடம் ஆலோசனை நடத்தியவர். பின் புதுகும்மிடிப்பூண்டியில் அமைய உள்ள முதல்வரின் மருந்தகத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார், உதவி செயற் பொறியாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், அமிழ்தமன்னன், வட்டாட்சிய.ர் சரவணகுமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments