நாகூர் அம்மாள் உதவும் இதயங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரை மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி கே.கே.நகர் பகுதியில் பல நாட்களாக பொதுமக்களுக்கு இடையூறு செய்துக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரை பொதுமக்கள் புகார் அழித்ததன் அடிப்படையில் நந்திவரம் கூடுவாஞ்சேரி 27வார்டு கவுன்சிலர் லையன் ஆர்.கலைச்செல்வன் அவர்கள் உடனடியாக நந்திவரம் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலை கோவிந்தராஜபுரத்தில் அமைந்துள்ள நாகூர் அம்மாள் உதவும் இதயங்கள் சமூக நல அறக்கட்டளையை தொடர்பு கொண்டு அவர்களிடம் இந்த நபரைப் பற்றிய தகவலை தெரிவித்தார்.
நாகூர் அம்மாள் சமூக நல அறக்கட்டளை சமூக ஆர்வலரும் நீயு ஆர்க்காடு பிரியாணி கடையின் உரிமையாளருமான ஹைதர் அலி அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் சுமதி அவர்களும் உடனடியாக கே.கே.நகர் பிரதான சாலையில் மயங்கிய நிலையில் இருந்த அந்த ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட ஆணுக்கு முதல் உதவி செய்து அவரை ஹைதர் அவர்கள் கரங்களால் குளிக்க வைத்து அவருக்கு வேறு மாற்றுடை அணிவித்து தனது சொந்த வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று மனநலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவரை பத்திரமாக மருத்துவர்களிடம் ஒப்படைத்தார்..
இதில் நந்திவரம் கூடுவாஞ்சேரி 27வார்டு கவுன்சிலர் லையன் ஆர்.கலைச்செல்வன் தகவல் தந்த உடனே துரித நடவடிக்கை எடுத்து அந்த ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட ஆணுக்கு உதவி செய்த நீயூ ஆர்க்காடு பிரியாணி உரிமையாளர் ஹைதர் அலி, சமூக ஆர்வலர் சுமதி, செயளாளர் லியாக்க்கத் அலி துனை தலைவர் சசிகுமார் அவர்களுக்கும் நாகூர் அம்மாள் உதவும் இதயங்கள் சமூக நல அறக்கட்டளைக்கும் சார்பாகவும் நந்திவரம் கூடுவாஞ்சேரி பொதுமக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
No comments