• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து பொன்னேரியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது


    தமிழக அரசுக்கு தேவையான நிதியை போதிய அளவு வழங்காத மத்திய அரசை கண்டித்தும்,தமிழ்நாட்டிற்கு தேவையான உரிமைகளை வழங்காததை கண்டித்தும், மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடே இடம் பெறாததை கண்டித்தும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொன்னேரி,ஹரிஹரன் பஜார் வீதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.இதில், மாநில மருத்துவ அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினரும்,கழக செய்தி தொடர்பாளருமான டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு,தலைமை கழகப்பேச்சாளர் ஆவடி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஓரவஞ்சனையுடன் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும்,தமிழக அரசு பொது மக்களுக்கு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்தும், மத்திய அரசால் வடமாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதிகள் குறித்தும்,ஜிஎஸ்டி மூலம் ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதிகள் குறித்தும், தமிழகத்தின் மெட்ரோ ரயில் திட்டத்துக்கும்,ரயில்வே திட்டத்துக்கும்,100 நாள் வேலை திட்டத்திற்கும்,வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு வகையில் ஓரம் வஞ்சனையுடன் செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து சிறப்புரையாற்றி பேசினர்.


    இந்நிகழ்ச்சியில் கே.ஜி.பாஸ்கர்சுந்தரம்,வெ.அன்புவாணன்,ஜி.ஸ்டாலின்,மு.பகலவன்,பி.ஜெ.மூர்த்தி,கே.வி.ஜி.உமாமகேஸ்வரி,எஸ்.ரமேஷ்,கே.வி.லோகேஷ்,வழக்கறிஞர் ஜி.ரவிக்குமார், டாக்டர் பரிமளம்விஸ்வநாதன், எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்,நா.செல்வசேகரன்,கா.சு.ஜெகதீசன்,பி.முத்து,ருக்மணிமோகன்ராஜ்,மு.மணிபாலன்,கி.வே.ஆனந்தகுமார்,டி.கே.சந்திரசேகர்,ஆ.சத்தியவேலு,ஜான்பொன்னுசாமி,ஏ.வி.ராமமூர்த்தி,பா.செ.குணசேகர்,ந.பரிமளம்,இரா.அறிவழகன், அபிராமிகுமரவேல்,மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வில்சன் நிலவழகன்,மாவட்ட மருத்துவ அணி தலைவர் ஆரணி டாக்டர் அ.பாலமுருகன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி என்ற ராஜேஷ் மற்றும் மாவட்ட,ஒன்றிய,பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில், பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் மா.தீபன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.

    No comments