• Breaking News

    தவெகவில் குழந்தைகள் அணி எதற்கு...? இதற்கு தான்.....

     


    குழந்தைகளை அணியானது குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து செயல்படும் அணியாக செயல்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக கட்சி தேர்தல் வியூகத்திற்கான பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த நிலையில் நேற்று கட்சி கட்டமைப்பு குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

    அதில் தவெக பொதுச் செயலாளர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் விஜய் தலைமையில் தேர்தல் வியூகம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் கட்சி அமைக்கப்பட்ட அணிகள் தமிழக வெற்றி கழகத்தின் சட்டவிதிகள் குறித்து அறிக்கை ஒன்றை தமிழக வெற்றிக் கழக தலைமை வெளியிட்டுள்ளது. அதில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இல்லாத நிலையில் குழந்தைகள் அணியினர் உள்ளிட்ட 28 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரிவுகளில் குழந்தைகள் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த அணியானது குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து செயல்படும் அணியாக செயல்படும் எனவும் 18 வயதுக்குட்பட்ட யாரும் அந்த அணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments