• Breaking News

    கீழ வீராணம் முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது


    தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணத்தில் முஸ்லிம் தொடக்கப் பள்ளி முஸ்லிம் உயர் நிலைப்பள்ளி, இணைந்து முஸ்லீம் கல்வி குழுமம் சார்பில் - பள்ளி குழந்தைகளுக்கானபல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைப் பெற்றது.வீராணம் முஸ்லிம் கல்வி குழுமம் பள்ளி தாளாளர் எம். சிந்தாநாதர் தலைமை தாங்கினார்.

    வீராணம் ஜமாத் தலைவர் எஸ் மியா கண்ணு, சத்துணவு அமைப்பாளர் சகுல் ஹமீது, ஜமாத் துணை தலைவர் உசேன், செயலாளர் முகமது இஸ்மாயில், துணை செயலாளர் கனி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வீராணம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸயீதா வரவேற்புரை வழங்கினார்.வீராணம் பள்ளி மேனாள் தாளாளர் ஜனாப் அ. அசன் வாழ்த்துரை வழங்கினார்.வீராணம் ஆலிம் நூரி பேஷ் இமாம் முகமது முகையதீன் இறை வணக்கம் பாடினார்.ஒளி ஒளி அமைப்பாளர் எஸ் கே சதாம் உசேன் தொகுப்புரை வழங்கினர்.கீழ வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்து மாணவ மாணவர்களின் அணிவகுப்பு மரியதையை ஏற்று கொண்டார்.

    முன்னதாக பள்ளியில் உள்ள தேசியக் கொடியினை முஸ்லிம் பள்ளி தாளாளர் சிந்தா மாதர் கொடியேற்றி துவக்கி வைத்தார்.முடிவில் வீராணம் முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மைதீன் நிஷா நன்றியுரை வழங்கினார்.

    விழாவில் முஸ்லிம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் செல்வி, அனிஷா பானு, ரஹ்மத் நிஷா, பெனாசிர் பானு , முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மைதீன் நிஷா, ஜான்சி ராணி, மரியக் குளோரி, சிவரஞ்சனி, சுமையா ரிஃபானா , தாமரைக்கனி, மழலையர் பள்ளி ஆசிரியர்கள் ஜன்னத் வ பிர்தெளஸ், கவிப்பிரியா,ஷைனிரஞ்சிதா, சகுந்தலா, தமிழ்ச்செல்வி, சேகம்மாள், அனிதா, சிலம்பு மாஸ்டர் ஆஷா, உள்பட பலர் உடனிருந்தனர்.

    No comments