முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்..... திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் வேண்டுகோள்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில்,திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு,திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில்,வருகின்ற 24-ம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்றும்,2026-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வருவதை ஒட்டி வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது என்றும்,அதிமுக வாக்குகளை ஒன்றாக கட்டமைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய கட்சி நிர்வாகிகள் அனைவரும் அயராது பாடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில்,பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பானுபிரசாத், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ்,மாவட்டத் துணைச் செயலாளர் சுண்ணாம்புகுளம் ஸ்ரீதர்,பொன்னேரி ஏ.யுவராஜ்,வழக்கறிஞர் ரமேஷ்,கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு,கும்மிடிப்பூண்டி பேரூர் செயலாளர் எஸ்.டி.டி.ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments