பெரியாரால் வரும் ஓட்டு எனக்கு தீட்டு..... சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றிய சர்ச்சையான விதமாக பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பொதுக்கூட்டத்தில் சீமான் மீண்டும் பெரியாரை சீண்டியுள்ளார். இது பற்றி சீமான் பேசியதாவது, இது தமிழ்நாடு இது தமிழ் மக்கள் இது தமிழ் தேசம் என்று பேசுகிறபோது எதிர்பார்ப்பார்கள் இல்லையா இதன் மூலம் உண்மையில் நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம் அது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்துகிறது.
பெரியார் பற்றி பேசினால் எனக்கு ஓட்டு விழும் என்றால் அந்த ஓட்டு எனக்கு வேண்டாம் அது எனக்கு தீட்டுதான் என்றார். முன்னதாக பெரியார் பாலியல் இச்சை வரும் போதெல்லாம் தாய்மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாக சீமான் கூறினார். அதோடு சீமானுக்கும் சமூக நீதிக்கும் பெண்ணுரிமைக்கும் சம்பந்தம் கிடையாது என்றும் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோர் கூட பெரியாரை எதிர்த்தார்கள் என்றும் தெரிவித்தார்.
திராவிடம் பேசி வரும் பெரியார் கொள்கையை பின்பற்றும் திமுகவினர் உண்மையாகவே எதிர்க்க வேண்டும் என்றால் கருணாநிதியை தான் எதிர்க்க வேண்டும் என்று எம்பி கனிமொழிக்கு கூட சீமான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதாவது கனிமொழி கூலிக்காரன் என்று சீமானை விமர்சித்த நிலையில் கருணாநிதி தான் உண்மையான கூலிக்காரர் என்று சீமான் பதிலடி கொடுத்தார். சீமான் தொடர்ந்து பெரியாரைப் பற்றி விமர்சித்து வருவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இந்த நிலையில் பெரியார் பற்றி பேசினால் எனக்கு ஓட்டு வரும் என்றால் அந்த ஓட்து தீட்டு என்று சீமான் கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments