• Breaking News

    சில்லறை தராத ஆத்திரத்தில் அரசு பேருந்தை திருடி சென்ற வாலிபர்

     


    சென்னை நீலாங்கரையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு மாநகர பேருந்து லாரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இது தொடர்பாக லாரி ஓட்டுனர் அங்கே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

     உடனடியாக காவல்துறையினர் அந்த பேருந்தை தேடிய நிலையில் நீலாங்கரை அருகே சாலை ஓரமாக பேருந்து நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பேருந்தில் இருந்த ஓட்டுநர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை காவல்துறையினர் தட்டி எழுப்பினர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில்அவர் அரசு பேருந்தின் ஓட்டுனர் கிடையாது என்பது தெரிய வந்தது. அவர் சென்னையைச் சேர்ந்த ஆபிரகாம் (35). இவர் நேற்று இரவு ஒரு அரசு பேருந்தில் சென்ற நிலையில் அந்த பேருந்து நடத்துனர் சில்லரை பாக்கி தொடர்பாக ஆபிரகாமை மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். 

    இதனால் அந்த  நடத்துனரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த ஆபிரகாம் திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு பேருந்தை யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த வாலிபரை தற்போது காவல்துறையினர் கைது செய்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments