திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு போலீஸ் வலைவீச்சு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வாட்டகுடி பகுதியை சேர்ந்தவர், அந்த 16 வயது சிறுமி. இவருடைய பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்தார்.
இதேபோல பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பழக்கடையில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள தென்னைமநல்லூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சிறுமிக்கும் சிவக்குமாருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. 6 மாத காலமாக காதலித்து வந்த நிலையில் கள்ளிக்குடிக்கு சிறுமியை அழைத்து வந்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை வெள்ளாகுளம் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கள்ளிக்குடிக்கு இருவரும் வந்தனர். சிறுமியிடம் உனக்கு தாலி வாங்கி வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றவர் அதன்பின்னர் வெகுநேரமாக வரவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுமி, கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவான சிவக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
No comments