இன்ஸ்டாகிராமால் சீரழியும் சிறுமிகள்.... பெற்றோர்களே உஷார்.....
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணிப்பேட்டையை சேர்ந்த அன்பு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்பு ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அன்புவை கைது செய்தனர். இந்த நிலையில் கடலூர் எஸ்பி பரிந்துரையின் அடிப்படையில் அன்புவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments