பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி பாய் கைது
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவர், 'ஆன்லைன்' மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 'ஆன்லைன்' மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று சப்ளை செய்வார். அதுபோல் அவர் நேற்று பகலில் கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் பொருட்களை சப்ளை செய்ய சென்றார்.
அப்போது அந்த வீட்டின் முன்கதவு பூட்டப்பட்டிருந்தது. எனவே அவர், வீட்டின் பின்பக்கம் வழியாக சென்று பார்த்தார். அங்கு பாத்ரூம்மில் பெண் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அந்த பெண் குளிப்பதை சதீஷ்குமார் பார்த்து ரசித்து, செல்போனில் 'வீடியோ' எடுத்ததாக தெரிகிறது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து அந்த பெண் கூச்சல் போட்டுள்ளார். உடனே தான் கொண்டு வந்த பொருட்களை அப்படியே வீசிவிட்டு சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி வந்துள்ளார்.இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். சதீஸ் குமாரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments