• Breaking News

    வினா ஸ்ரீ யோக மையம் நடத்திய தேசிய அளவிலான யோகாசனம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜ் பரிசுகளை வழங்கினார்


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில்.வினா ஸ்ரீ  யோக மையம் நடத்தும்  தேசிய அளவிலான யோகாசன போட்டி 2025  (9.2.2025)இந்த போட்டியில் சுமார் 7 மாநிலங்கள் கலந்து கொண்டன 800 க்கும் மேற்பட்ட  மாணவ,  மாணவிகள் பங்கேற்றனர். இதை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜெ. கோவிந்தராஜன் அவர்கள் சமூக ஆர்வலர் எம் ஜெயந்தி அவர்கள் மற்றும் எலைட்  வேர்ல்ட்  தலைமை ஆசிரியர் குமார் லயன்ஸ்  முத்து அவர்கள் மற்றும் தினேஷ்,   நோவா ராஜ்குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். 

    இதில் ஆண்கள் பிரிவில் சேம்பியன் ஆப் சேம்பியன் பட்டம்  எம் ஹரிஷ் மற்றும் சீத்தேஷ் வெற்றி பெற்றனர் இரண்டாம் இடத்தை  யோஜித், நீலேஷ் அவர்கள் பிடித்தனர் பெண்கள் பிரிவில்   ஜெய ஸ்ரீதனா, மதுலிகா வெற்றி பெற்றனர் இரண்டாம் இடத்தை பூஜ்ஜியா ஸ்ரீ மற்றும் ரெஜினா பிடித்தனர். மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த எலைட் வேர்ல்ட் பள்ளி தட்டி சென்றது.

     போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு    சிறப்பு விருந்தினர்கள் வி எம் சீனிவாசன், எல் சுகுமாரன், மனோஜ் மற்றும் சேதுபதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர் அதேபோல் மாணவ மாணவிகளின் வெற்றிக்கு  ஊன்று கோளாக விளங்கிய  சாதனையாளர் விருது பெற்ற ஆசிரியர்  காலத்தீஸ்வரன் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் அர்ச்சனா,வித்யா ஆகியோருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    No comments