• Breaking News

    அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யுங்கள்.... சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

     


    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.இது தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. ஜாமின் வழங்கிய மறுநாளே, அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவர் அமைச்சராக இருப்பதால், அரசு ஊழியர்களாக இருக்கும் சாட்சிகள், வழக்கில் சாட்சி அளிக்க வர மறுப்பதாக புகார்கள் எழுந்தன. அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பண மோசடியில் பாதிக்கப்பட்ட புகார்தாரர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா என்பதை கேட்டுச் சொல்லுங்கள்' என்று அவரது வக்கீலிடம் தெரிவித்தது.இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.

    No comments