• Breaking News

    நடிகர் விஜயலட்சுமி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..... சீமான் ஷாக்

     


    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அதாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். 

    இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி சீமான் தொடர்ந்த  வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    No comments