தொகுதி மறு சீரமைப்பால் தமிழ்நாட்டில் எம்பி தொகுதி குறையுமா.? முதலமைச்சரின் நாடகத்திற்கு அமித்ஷா சொன்ன பதில்....
தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு தொகுதி மறு வரையறை செய்தால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார். இதற்காக மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மொத்தம் 45 கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு தொகுதி சீரமைப்பு என்று எப்போதுமே சொன்னதில்லை. முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறார்.
இது பற்றி யாருமே பேசாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஏன் கபட நாடகமாடுகிறார். நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என்று யார் சொன்னார்கள் என்பதை முதல்வர் சொல்ல வேண்டும். முதலில் யார் அதை சொன்னார்கள் என்பதை ஸ்டாலின் கூறினால் அந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டிப்பாக பாஜகவும் பங்கேற்கும் என்றார். இந்த நிலையில் கோவை நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் கூறியதாவது, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்பி சீட் கூட குறையாது. விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்படும் என கூறியுள்ளார்.
No comments