சங்கராபுரம் அடுத்த கானாங்காடு கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சங்கராபுரம் போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தியதில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் (26) என்பவர் பால் கேனில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடமிருந்து 12 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார், அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
0 Comments