நாகை அடுத்த பொரவாச்சேரியில் அமைந்துள்ள புது வாழ்வு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் காச நோய் கன்டறிவு முகாம் நடைபெற்றது
நாகப்பட்டினம் மாவட்டம் பொரவாச்சேரியில் அமைந்துள்ள புதுவாழ்வு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் அறக்கட்டளையின் நிறுவனர் கலைவாணன் தலைமையில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. முகாமில் வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மக்களைத் தேடி மருத்துவம் நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 25 உறுப்பினர்களுக்கு எக்ஸ்ரே மற்றும் சளி மாதிரி பரிசோதனை நடைபெற்றது.
முதன்மை சிகிச்சை காசம் மேற்பார்வையாளர் தர்மலிங்கம் , செவிலியர் ஜோசிஜுலி,தன்னார்வலர் நர்மதா, எக்ஸ்ரே பணியாளர் சுர்ஜித் ஆகியோர் கலந்து கொண்டனர் ஆரம்ப சுகாதார நிலையம் நூறாவது காசநோய் முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியாளர் ஜி. சக்ரவர்த்தி
No comments