நாகப்பட்டினம் செல்லூர் சுனாமி குடியிருப்பு புனித பெரியநாயகி மாதா ஆலய முதலாம் ஆண்டு திருவிழா..... திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டிணம் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கோணான்குப்பம் புனித பெரியநாயகி மாதா ஆலய முதலாம் ஆண்டு திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது இதில் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி நடைபெற்றது.
முன்னதாக நாகை புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்கு தந்தை பேரருள் பன்னீர்செல்வம் திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார் தொடர்ந்து திருத்தேரில் மிக்கேல் சம்மனசு அந்தோணியார் மாதா சுருவங்கள் வைக்கப்பட்டு மந்திரிக்கப்பட்டு திருத்தேர் ஆலயத்தின் வளாகத்தில இருந்து துவங்கி, வண்ணமிகு வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக, மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் ஜி. சக்ரவர்த்தி
No comments