புளியங்குடியில் புல்வாமா தாக்குதல் நினைவுதினம் அனுசரிப்பு
புளியங்குடியில் நகர இந்து முன்னணி சார்பில் புல்வாமா தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
புளியங்குடி நகரில் நகர இந்து முன்னணி பொறுப்பாளர் முத்து அவர்களின் ஏற்பாட்டில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நமது இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நகர பிஜேபி தலைவர் சண்முகசுந்தரம், இந்து ஆன்மீகம் பொறுப்பாளர் மாரியப்பன், V H P பொறுப்பாளர் முருகன், BJP மாவட்ட முன்னாள் துணை தலைவர் ராதாகிருஷ்ணன்,காமராஜ், சுடலைமுத்து, இராமசாமி, மகேந்திரன், அஸ்வதி, மாரியப்பன், திருநாவுக்கரசு, கணேஷ்குமார், RSS மாரிமுத்து, உள்ளிட்ட பரிவார அமைப்புக்கள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினார்கள்.
No comments