• Breaking News

    சென்னையில் போலீஸ் வாகனங்கள் உடைப்பு..... ஒருவர் கைது

     



    சென்னை போலீஸ் வடக்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் (தண்டையார்பேட்டை) நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர், மூன்று போலீஸ் வாகனங்களை கல் வீசி தாக்கி கண்ணாடிகளை நொறுக்கியுள்ளார். நள்ளிரவில் போலீசார் பணியில் இருக்கும் போது, வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து போலீசார், சி.சி.டி.வி., காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தினர். பின்னர், சிதம்பர பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் போலீஸ் வாகனங்களை தாக்கிய போது போதையில் இருந்தாரா? மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    No comments