• Breaking News

    ஓசியில் கறி கிடைக்காத ஆத்திரம்.... கறிக்கடை முன்பு பெண் சடலம் வீச்சு..... போலீசார் விசாரணை

     


    ஓசியில் கறி கிடைக்காத காரணத்தினால், சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பெண் சடலத்தை கறிக்கடை முன் வீசிச்சென்ற சம்பவம், தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் நடந்துள்ளது.இன்று( பிப்.,09) காலை குமார் கடைக்கு வந்து மணியரசனை மிரட்டி இலவசமாக கறி கேட்டுள்ளார்.

     கூட்டம் அதிகமாக இருந்ததால் இலவசமாக கறி கொடுப்பதற்கு மணியரசன் மறுத்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற குமார் சிறிது நேரம் கழித்து சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பெண் சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்து வந்த பழனிசெட்டிபட்டி போலீசார், சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் .சடலம் யாருடையது, எங்கிருந்து எடுத்துவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரை போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஞாயிற்றுக்கிழமை என்பதால் கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் கூடும் நேரத்தில் சடலத்தை கடை முன் வீசிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments