புதுக்கோட்டை: எலிக்கொல்லி ஸ்பிரேயை முகத்தில் மாறி மாறி அடித்துகொண்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் ராமராசு. இவருக்கு ரிஷிகேஷ்(6) என்ற மகன் உள்ளார். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ரிஷிகேஷ் தனது நண்பர்களான ரித்திக்(6), கருப்பசாமி(5), தன பிரியன்(5) ஆகியோருடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் காருக்கு பயன்படுத்தக்கூடிய எலிக்கொல்லி ஸ்பிரேயை கையில் வைத்துக் கொண்டு விளையாடியதாக தெரிகிறது.
ஒவ்வொருவர் முகத்திலும் மாறி மாறி ஸ்பிரே அடித்து கொண்டனர். இதனால் சிறுவர்களின் வாய் வழியாக மருந்து உடலுக்குள் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த பெற்றோர் உடனடியாக தங்களது மகன்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக இந்த சிறுவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments