• Breaking News

    கனவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு.... மகளை கொன்று, தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவி

     


    பெங்களூரு, ராமய்யா லே - அவுட்டில் வசித்து வருபவர்கள் கோபாலகிருஷ்ணா - ஸ்ருதி, 34. இவர்களுக்கு 9 வயதில் மகனும், 4 வயதில் ரோஷினி என்ற மகளும் இருந்தனர்.ஸ்ருதி, பாவகடா கிராம பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். இவரது கணவர் கோபாலகிருஷ்ணா பட்டய கணக்காளராக உள்ளார். இவருக்கும், வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது ஸ்ருதிக்கு தெரிய வந்தது.

    இது தொடர்பாக தம்பதிக்குள் பல முறை தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால், கணவர் திருந்தவில்லை. அத்துடன் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தி உள்ளார்.இதனால் வேதனை அடைந்த ஸ்ருதி, நேற்று முன்தினம் மாலை, வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மகளை கொன்ற ஸ்ருதி, துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.விளையாட வெளியே சென்ற மகன், வீடு திரும்பியபோது, தாயும், தங்கையும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்தார். அவர்களும் பாகலகுண்டே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    வீட்டை சோதனை செய்த போலீசார், ஸ்ருதி தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். கடிதத்தில், 'என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்' என ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார்.

    ஸ்ருதியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கோபாலகிருஷ்ணாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

    No comments