கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி
சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது அதனை சரி செய்யும் பணியில் பட்டாபிராமன் என்பவர் ஈடுப்பட்டுள்ளார்.
திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments