திருவள்ளூர்: வேம்பேடு கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேம்பேடு கிராமத்தில் புதிதாக 50 லட்சுமி ரூபாய் திருப்பணிகள் முடித்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் நிறுவப்பட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி முதல் கால யோக பூஜை இரண்டாம் கால யாக பூஜை கலச புறப்பாடு மகா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல்வேறு கங்கை நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு அதன் பின்பு பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலின் நிறுவனர் பிரேமா ஏழுமலை விஷ்வாபதி குருக்கள் மணி அர்ச்சகர் பிரசாந்த் மணிமாலா மற்றும் வேம்பேடு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments