நாகை நகராட்சி ஆரிய நாட்டு தெருவில் மின்விளக்கு இல்லாததால் விஷச்சந்துகளால் இரவு நேரத்தில் அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்..... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாகப்பட்டினம் நகராட்சி 24 வது வார்டு ஆரிய நாட்டு தெருவில் 8 9 10வது சந்து கடற்கரை ஓரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீடுகளை சுற்றி கருவ மரங்கள் சூழ்ந்துள்ளதால் இரவு நேரத்தில் பாம்பு, நரி போன்ற காட்டு விலங்குகளும் விஷச்சந்துகளும் அதிகமாக சுற்றித் திரிவதாகவும் குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்வதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதனால் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகத்திடம் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் மின்கம்பங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது இதுவரை மின்சாரத் துறை சார்பில் மின்கம்பிகள் அமைக்கவில்லை எனவும் பலமுறை தெரிவித்தும் அலட்சியமாக செயல்படுவதாகும் குற்றச்சாட்டு முன்வைக்கும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க இல்லையெனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் ஜி. சக்கரவர்த்தி
No comments