கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் , செவிலியர்கள் பற்றாக்குறை..... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்.....
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் செயல்படும் தாலுக்கா அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாத மாவட்ட நிர்வாம் மற்றும் சுகாதாரதுறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இருக்க வேண்டும், பல் மருத்துவரை உடனடியாக நியமிக்க வேண்டும், காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் திடிரென மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் கீழ்வேளூர் வட்டாட்சியர் கவிதாஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் இருத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற தடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
No comments