மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
2025 - 26 ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு ஏமாற்றம், உரம் , எரிபொருளுக்கு மானியம் குறைப்பு, கல்வி, சுகாதாரத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை, வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் இல்லாத அறிக்கை என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதே போன்று நாகை, கீழ்வேளூர், சிக்கல், திருமருகல், கீழையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
No comments