காமராஜர் நினைவு சின்னம் சேதம்.... ஆலங்குளத்தில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காமராஜர் நினைவு சின்னம் சேதப்படுத்தப்படுத்த பட்டதை கண்டித்து ஆலங்குளத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.குமரி மாவட்டம், மாத்தூரில் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு தலைமை வகித்தார். இதில் நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், காமராஜர் ஆதித்தனார் நேசமணி நாடார் பேரவை நிறுவனர் வழக்கறிஞர் ஆ. ராஜா, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தங்க செல்வம், பேரூராட்சி கவுன்சிலர் கணேசன், மதிமுக நகர செயலாளர் கண்ணன், காங்கிரஸ் நகர துணை தலைவர் லிவிங்ஸ்டன் விமல், நகர செயலாளர் யேசுராஜா,வழக்கறிஞர்கள் கருப்பசித்தன், மணிகண்டன், காங்கிரஸ் ஒபிசி பிரிவு அணி ஞானபிரகாஷ், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சொக்கலிங்கம், சோனாமகேஷ், தமிழரசன், குமார், மாவட்ட திமுக பிரதிநிதி அன்பழகன், காங்கிரஸ் இளைஞர் அணி நகர தலைவர் கார்த்திக், சான்றோர் படை கட்சி பொறுப்பாளர் அலெக்ஸ், பாஜக ஒயிட் மோகன், ஆட்டோ லட்சுமணன், ஆறுமுகராஜ், சிவா, திரவியம், காமராஜ், ஆதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments