• Breaking News

    செங்கல்பட்டு: மனிதநேய வணிகர் சங்கம் சார்பாக வணிகர்களை காப்போம் வாழ்வுரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் கூட்டம் நடைபெற்றது


    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய வணிகர் சங்கம் சார்பாக வணிகர்களை  காப்போம் வாழ்வுரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் பிஆர்சி மஹாலில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.அப்துல் முனாப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது செங்கல்பட்டு வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் அசன் அலி அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எம்.யாக்கூப் எம்சி மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் புது மடம் அலிம் அவர்கள் கலந்து கொண்டு வணிகர்களிடையே பல்வேறு கருத்துகளை தெரிவித்து வியாபாரிகளின் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் பற்றி எடுத்துரைத்தார்கள்.

    வர்த்தக அணி மாநில செயலாளர் ஏ.கௌஸ் பாஷா அவர்கள் தொகுப்புரை வழங்கினார்கள். திராவிடர் கழகத்தின் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன்,செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன், தலைமை கழக பேச்சாளர் காஞ்சி மாவட்ட தலைவர் ஜே.சலீம் கான், மனிதநேய மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.தமிம் அன்சாரி, மமக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் எம்.முஜிபூர் ரகுமான், மாநில தொழிற்சங்க அணி பொருளாளர் ஏ.ஆஷிக் ஹமீது, தாம்பரம் பெருநகர அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் காஜாமைதீன், பொருளாளர் பி.டிட்டோ ராஜ், பகுதி வர்த்தக அணி பொருளாளர் எஸ்.சேக் தாவூத், துணை செயலாளர் ஏ.முஹம்மது சுலைமான் மற்றும் மாநில மாவட்ட பகுதி வார்டு நிர்வாகிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் வியாபாரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.இறுதியாக தாம்பரம் பகுதி வர்த்தக அணி செயலாளர் எம்எஸ் எச்.அசாருதீன் அவர்கள் நன்றி உரையாற்றினார்கள்.

    No comments